ஆசிரியர் வாண்மை விருத்தி
"ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை / பெறுபேறுகளை வெற்றிகாரமான வகையில் உருவாக்கத் தேவைப்படுகின்ற திறன்கள், தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் செயன்முறையே ஆகும்."
"ஆசிரியர்கள் தாம் மாற்றல் முகவர் என்னும் வகையில் தமது கடமை, பொறுப்புக்களை மீள் சிந்தனை செய்யவும், புதுப்பிக்கவும், நிறைவேற்றவும் உதவுகின்ற செயன்முறையே வாண்மை விருத்தி ஆகும். இதண் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அறிவு, திறன் ஆகியவற்றை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்."
(-Day-1999-)
ஆசிரியர் வாண்மை விருத்தியின் அவசியம்.
ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், அறிவு போன்ற தகுதிகளை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒரு செயல்முறை ஆகும். சமூகத்தின் தேவைக்கும், கல்வி குறிக்கோள்களுக்கு ஏற்பவும் பொருத்தமான கல்வியை ஏற்படுத்த ஆசிரியர்கள் வாண்மை விருத்தி பெற வேண்டும். ஆசிரியரானவர் தினமும் கற்பவராக காணப்பட வேண்டும். அதிலும் பாட விடயம் மட்டுமின்றி கற்பித்தல் முறை முகாமைத்துவம், தொடர்பாடல், சமூக நிலை, தொழில்நுட்பம் போன்ற சகல விடயங்கள் தொடர்பாகவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வாண்மைத்துவ விருத்தி இன்றியமையாததாகும்.
அந்த வகையில் ஆசிரியர் ஒருவரின் பிரதான பணி சிறந்த கல்வியை மாணவருக்கு வழங்குவதாகும். அதன் அடிப்படையில் மாணவருக்கு ஆழமான கல்வியை வழங்க ஓர் ஆசிரியருக்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஒவ்வொரு ஆசிரியரும் தாம் கற்பிக்கும் பாடத்துறை சார் அறிவைக் கொண்டு காணப்பட்டாலும் மேலும் மேலும் அவை மழுங்கிப் போகாது மாணவர்களுக்கு சென்றடைவிக்க வேண்டும். சில ஆசிரியர்களிடம் காலம் செல்ல செல்ல பாட விடயம் சார் அறிவு குறைவடையும் சந்தர்ப்பம் அல்லது தெளிவின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படையலாம். அதனால் பாட விடயம் சார் ஆழமான அறிவை பெற்றிருக்க வேண்டிய செயல்முறைகளை செய்ய ஆசிரியர் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. உதாரணமாக; தமது பாடம் சார்பாக புதிய விடயங்களை தேடி அறியவும் தமது பாடத்துறையில் மேற்படிப்புகளை தொடர வேண்டும் என்பதையும் வாண்மை விருத்தி செயல்முறை எடுத்துக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யும் போது ஆசிரியர்கள் ஆழமான அறிவினை பெற்றுக்கொள்ளும் அதே வேளை மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை கொடுக்க முடியும். மாணவர்களை சிறந்த அடைவை நோக்கி வழிபடுத்தவும் உதவும்.
மேலும் கற்பித்தலின் போது அவை மாணவரிடம் சென்றடையும் முறையில் கற்பிக்க வேண்டுமாகவிருந்தால் அதற்கு வாண்மை விருத்தி இன்றியமையாததாகும். அதாவது ஒரு ஆசிரியருக்கு பாட அறிவு எவ்வளவு முக்கியமோ அதேபோல கற்பித்தல் முறைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் வகுப்பறையில் பல்நுண்மதி கொண்ட மாணவர்களும் பல்வேறு இடர்பாடு மற்றும் பல்வேறு தன்மைகள் கொண்ட மாணவர்களும் காணப்படுவர். அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரே விதமாக கற்பிக்கும் போது அவை மாணவரிடத்தில் சென்றடைவதில் குறைபாடுகள் ஏற்படும். சகலமானவர்க்கும் பொருந்தக்கூடிய முறையில் கற்பிக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். தனியே பாட அறிவைக் கொண்டிருப்பதால் பயனில்லை என்றே கூறலாம். அனைத்து மாணவர்களும் பயன்பெற கற்பித்தல் நுட்பங்கள் திட்டமிடப்பட வேண்டியது அவசியம். ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி பெற்றால் மாத்திரமே அவை சாத்தியமாகும். உதாரணமாக; சிறந்த கணித அறிவு கொண்ட ஆசிரியர் கற்பித்தல் நுட்ப முறைகள் உரியவாறு பின்பற்றாத விடின் மாணவர்களின் கணித அடைவு குறைவாகவே காணப்படும். பஉரிய கற்பித்தல் திறன் விருத்தி பெற்றவராயின் மாணவருக்கு விளங்கும் முறையில் இலகுவாக கற்பிக்க முடியுமாக இருக்கும் அதுவே மாணவரிடத்தில் சிறந்த அடைவை ஏற்படுத்தும்.
அதுமட்டுமன்றி சிறப்பான முறையில் துணை சாதனங்களை தெரிவு செய்யவும் அவற்றை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. அதாவது தனியே கரும்பலகையினையோ அல்லது பாடநூலினையோ பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு உரிய விளக்கம் மற்றும் செயல்முறை அறிவு என்பன கிடைப்பதில்லை. என்பதோடு மாணவருக்கு ஆர்வமும் குறைய வாய்ப்பாகிவிடும். அத்துடன் உரிய பாடங்களுக்கு உரிய துணை சாதனங்களை பயன்படுத்துவதனாலேயே வினைத்திறனான கற்றலினை ஏற்படுத்த முடியும். உதாரணமாக; கணினி சார்பான பாடம் அல்லது தொழில்நுட்பத்தினை கற்பிக்கும் போது கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானத்தினைக் கற்பிக்கும் போது உரிய சாதனங்களையும் ஏனைய துணை சாதனங்களையும் பயன்படுத்த உரிய வாண்மை விருத்தி செயல்முறைகள் உதவுகின்றன.
அத்தோடு தனியே வகுப்பறை கற்பித்தலில் ஈடுபடாது ஏனைய இணைபாடவிதான செயல்முறைகளையும் செய்விக்கவும், மாணவர் மைய கற்பித்தலை மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி செயன்முறை அவசியமாகின்றது. வாண்மைத்துவம் இல்லையெனில் விரிவிரைமுறை கல்வியும், தனியே வகுப்பறை கற்பித்தலும் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி காலத்திற்கு காலம் மாற்றமடையும் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கற்றல் - கற்பித்தல் செயல்முறைகளில் ஈடுபடவும் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. நாட்டின் கல்வி இலக்குகள், தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கலைத்திட்டம் பற்றி அறிந்து அதற்கேற்ப செயற்படவும், மாணவரில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தவும் அவசியமாகின்றது. எடுத்துக்காட்டாக; பயிற்சி பட்டறைகள் செயலமர்வுகள் போன்றவற்றின் மூலம் கலைத்திட்ட அமுலாக்கம் பற்றிய விளக்கத்தினையும் பாடத்திட்டம் சார் தெளிவினையும் வழங்கப்படுவதனை காணலாம்.
மேலும் ஆசிரியரானவர்கள் மாறிவரும் உலகிற்கு ஏற்ப தம்மை இசைவாக்கிக் கொள்ள வாண்மை விருத்தி அவசியமாகின்றது. இன்றைய நவீன உலகில் ஆசிரியர்கள் பழமை மரபைப் பின்பற்றாமல் இசைவாக்கம் பெற வேண்டும். அவ்வாறு செய்வதால் தொழில்முறை வளர்ச்சியினை ஏற்படுத்த முடியும். குறிப்பாக தமது பதவிகளை உயர்த்துவதற்காக மேலும் கற்றுக் கொள்கின்றனர். (உதாரணமாக; பட்டப்பின் கற்கை, முதுமாணிக் கற்கை) அவ்வாறு தொடர்ந்து கற்று தமது பதவிகளை உயர்த்துவதன் ஊடாக சம்பளப் படிகளையும் உயர்வாக பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு தொழில் ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை பெறவும் ஆசிரியர் வாண்மை விருத்தி ஓர் ஆசிரியருக்கு அவசியமாகின்றது.
மாணவர்களின் உடைய வாழ்க்கைச் முறைகளுக்கு உதவுவதாகவும் ஆசிரியரது கற்பித்தல் அமைய வேண்டும் அதாவது ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவை மட்டும் கொடுத்தால் போதாது அதனையும் தாண்டி மனப்பாங்கு அர்ப்பணிப்பு ஊக்கம் தேடல் தத்துவம் படத்தில் மாதத்தை ஏற்படுத்த வேண்டும் மாணவர்களின் உடைய மனநிலை உணவ வயது என்பவற்றினை கருத்தில் கொண்டும் செயற்பட்டு மாணவரின் முழுமையான மாற்றங்களை ஏற்படுத்தி பூரணத்துவம் கொண்ட பிறச்சையாக உருவாக்க ஒரு ஆசிரியருக்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது.
ஆசிரியர்கள் மாணவர்களிடமும் மாணவர் சார்பாக பெற்றோர்களிடமும், சக ஆசிரியர்கள், சமூகம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமும் நல்லுறவை ஏற்படுத்த வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஏனெனில் நல்ல தொடர்பாடலானது சுமூகமான சூழலையும் கற்றலையும் பலப்படுத்தும் அவ்வாறு ஏற்றத்தாழ்வின்றி தொழில் கர்வமின்றி செய்யப்பட ஒருவருக்கு (ஆசிரியருக்கு) வாண்மை விருத்தி அவசியமாகும்.
அத்துடன் ஆசிரியரே அதிகமான மாணவர்களுக்கு முன்மாதிரி என்ற அடிப்படையில் அவர் சிறந்த முன்மாதிரியாக திகழ வாண்மை விருத்தி அவருக்கு உதவுகின்றது. அந்த வகையில் சிறந்த மொழி நடை, பேச்சுவார்த்தை, பிறருடனான தொடர்பு நேரம் ஆக முகாமைத்துவம், நடை உடை பாவனை, ஒழுக்கம், நேர்மை, சிறந்த அறிவு, மேற்படிப்புக்கான ஆர்வம் என்பன சிறந்த முறையில் காணப்பட வேண்டும். ஏனெனில் மாணவர்கள் அவற்றை தமது வாழ்வில் பின்பற்றுபவராகக் காணப்படுவர். அதனால் அவ்வாறான பண்புகளை வாண்மை விருத்தி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக; ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் கற்கைகள் மூலம் (B.ED, P.G.D.E, M.ED) ஆசிரியர்களுக்கு (முன் சேவை, சேவைக்கால பயிற்சி) பயிற்சிகள் வழங்கப்படுவன சிறப்பான விடயமாகவும் காணப்படுகின்றன.
மேலும் வகுப்பறை முகாமைத்துவத்தினை உரிய முறையில் பேணுவதற்கும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் வகுப்பறையில் மாணவர்களின் வகைமையை சமாளிக்கவும், மாணவர்களிடம் குழுமுறை ஒத்துணர்வைப் பேணவும், வகுப்பின் கவின்நிலையை பேணவும், நேரம் முகாமைதத்துவம் மற்றும் சுத்தம் போன்றவற்றைப் பேணவும் வாண்மை விருத்தி அவசியமாகும்.
மாணவர் நலனில் அக்கறை பேணவும் வாண்மை விருத்தி ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.
எனவே மேற்கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது மாணவர் சமுதாயத்தை தட்டிக் கொடுத்து சிறந்த கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களை சிறந்த பிரஜைகளாக்கவும், ஆசிரியர்கள் தமது கற்பித்தல் சார் திறன்கள், தேர்ச்சிகள் என்பவற்றை விருத்தி செய்து கொள்ளவும், மாணவர்களினுடைய கல்வி சார்ந்த அறிவு மட்டங்களை உயர்த்தி வெற்றிகரமானதாக மாற்றி சிறந்த அடைவை நோக்கி செய்யற்படச் செய்து கொள்ளவும் ஓர் ஆசிரியருக்கு வாண்மைத்துவ விருத்தி இன்றியமையாத ஒன்றாக விளங்குவதனை காண முடியும்.
- வகுப்பறை அவதானிப்பு (Classroom Observation): அதிபர், பிரதி அதிபர் அல்லது துறைசார் பொறுப்பாசிரியர்கள் வகுப்பறை கற்பித்தலை அவதானித்து, கற்பித்தல் முறைகள், வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவர் ஈடுபாடு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிதல்.
- சுயமதிப்பீடு (Self-Assessment): ஆசிரியர்கள் தங்களின் சொந்த கற்பித்தல் திறன்கள், பாட அறிவு மற்றும் தொழில்சார் சவால்கள் குறித்து சுய பிரதிபலிப்பு (Reflection) மூலம் தேவைகளை உணர்தல்.
- மாணவர் அடைவுப் பகுப்பாய்வு (Student Performance Analysis): தவணைப் பரீட்சைகள், வகுப்பறை மதிப்பீடுகள் மற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், எந்தப் பாடப்பரப்பில் ஆசிரியருக்கு மேலதிக பயிற்சி தேவை என்பதை இனங்காணலாம்.
- பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி (SBPTD) குழுச் சந்திப்புகள்: பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் ஆசிரியர்களின் பொதுவான மற்றும் தனிப்பட்ட தேவைகள் கலந்துரையாடப்பட்டு இனங்காணப்படுகின்றன.
- ஆசிரியர் தொழில் சார்ந்த பகுதிகளை இனம் காணுதல் : ஆசிரியர் தேர்ச்சிக் கட்டமைப்பின் அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மாணவர் உளவியல் சார்ந்த தேவைகளை பகுப்பாய்வு செய்தல்.
- ஆய்வுச் செயற்பாடுகள் (Action Research): ஆசிரியர்கள் தாமாகவே தங்கள் வகுப்பறையில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணத் தேவையான அறிவை இனங்காணுதல்.
- ஆசிரியரது கற்பித்தல் தொடர்பான பின்னூட்டங்கள் (Feedback): சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பயிற்சியின் தேவையை உணர்தல்.
No comments:
Post a Comment