Tuesday, 2 September 2025

ஆசிரியர் வாண்மை விருத்தி


ஆசிரியர் வாண்மை விருத்தி


"ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை / பெறுபேறுகளை வெற்றிகாரமான வகையில் உருவாக்கத் தேவைப்படுகின்ற திறன்கள், தேர்ச்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் செயன்முறையே ஆகும்."

                                 (- Hassesl - 1999-)


"ஆசிரியர்கள் தாம் மாற்றல் முகவர் என்னும் வகையில் தமது கடமை, பொறுப்புக்களை மீள் சிந்தனை செய்யவும், புதுப்பிக்கவும், நிறைவேற்றவும் உதவுகின்ற செயன்முறையே வாண்மை விருத்தி ஆகும். இதண் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அறிவு, திறன் ஆகியவற்றை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்."
                                        (-Day-1999-)


ஆசிரியர் வாண்மை விருத்தியின் அவசியம்.


       ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், அறிவு போன்ற தகுதிகளை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒரு செயல்முறை ஆகும். சமூகத்தின் தேவைக்கும், கல்வி குறிக்கோள்களுக்கு ஏற்பவும் பொருத்தமான கல்வியை ஏற்படுத்த ஆசிரியர்கள் வாண்மை விருத்தி பெற வேண்டும். ஆசிரியரானவர் தினமும் கற்பவராக காணப்பட வேண்டும். அதிலும் பாட விடயம் மட்டுமின்றி கற்பித்தல் முறை முகாமைத்துவம், தொடர்பாடல், சமூக நிலை, தொழில்நுட்பம் போன்ற சகல விடயங்கள் தொடர்பாகவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வாண்மைத்துவ விருத்தி இன்றியமையாததாகும்.

               அந்த வகையில் ஆசிரியர் ஒருவரின் பிரதான பணி சிறந்த கல்வியை மாணவருக்கு வழங்குவதாகும். அதன் அடிப்படையில் மாணவருக்கு ஆழமான கல்வியை வழங்க ஓர் ஆசிரியருக்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஒவ்வொரு ஆசிரியரும் தாம் கற்பிக்கும் பாடத்துறை சார் அறிவைக் கொண்டு காணப்பட்டாலும் மேலும் மேலும் அவை மழுங்கிப் போகாது மாணவர்களுக்கு சென்றடைவிக்க வேண்டும். சில ஆசிரியர்களிடம் காலம் செல்ல செல்ல பாட விடயம் சார் அறிவு குறைவடையும் சந்தர்ப்பம் அல்லது தெளிவின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படையலாம். அதனால் பாட விடயம் சார் ஆழமான அறிவை பெற்றிருக்க வேண்டிய செயல்முறைகளை செய்ய ஆசிரியர் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. உதாரணமாக; தமது பாடம் சார்பாக புதிய விடயங்களை தேடி அறியவும் தமது பாடத்துறையில் மேற்படிப்புகளை தொடர வேண்டும் என்பதையும் வாண்மை விருத்தி செயல்முறை எடுத்துக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யும் போது ஆசிரியர்கள் ஆழமான அறிவினை பெற்றுக்கொள்ளும் அதே வேளை மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை கொடுக்க முடியும். மாணவர்களை சிறந்த அடைவை நோக்கி வழிபடுத்தவும் உதவும்.

                      மேலும் கற்பித்தலின் போது அவை மாணவரிடம் சென்றடையும் முறையில் கற்பிக்க வேண்டுமாகவிருந்தால் அதற்கு வாண்மை விருத்தி இன்றியமையாததாகும். அதாவது ஒரு ஆசிரியருக்கு பாட அறிவு எவ்வளவு முக்கியமோ அதேபோல கற்பித்தல்  முறைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் வகுப்பறையில் பல்நுண்மதி கொண்ட மாணவர்களும் பல்வேறு இடர்பாடு மற்றும் பல்வேறு தன்மைகள் கொண்ட மாணவர்களும் காணப்படுவர். அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரே விதமாக கற்பிக்கும் போது அவை மாணவரிடத்தில் சென்றடைவதில் குறைபாடுகள் ஏற்படும். சகலமானவர்க்கும் பொருந்தக்கூடிய முறையில் கற்பிக்க வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். தனியே பாட அறிவைக் கொண்டிருப்பதால் பயனில்லை என்றே கூறலாம். அனைத்து மாணவர்களும் பயன்பெற கற்பித்தல் நுட்பங்கள் திட்டமிடப்பட வேண்டியது அவசியம். ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி பெற்றால் மாத்திரமே அவை சாத்தியமாகும். உதாரணமாக; சிறந்த கணித அறிவு கொண்ட ஆசிரியர் கற்பித்தல் நுட்ப முறைகள் உரியவாறு பின்பற்றாத விடின் மாணவர்களின் கணித அடைவு குறைவாகவே காணப்படும். பஉரிய கற்பித்தல் திறன் விருத்தி பெற்றவராயின் மாணவருக்கு விளங்கும் முறையில் இலகுவாக கற்பிக்க முடியுமாக இருக்கும் அதுவே மாணவரிடத்தில் சிறந்த அடைவை ஏற்படுத்தும்.

             அதுமட்டுமன்றி சிறப்பான முறையில் துணை சாதனங்களை தெரிவு செய்யவும் அவற்றை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. அதாவது தனியே கரும்பலகையினையோ அல்லது பாடநூலினையோ பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு உரிய விளக்கம் மற்றும் செயல்முறை அறிவு என்பன கிடைப்பதில்லை. என்பதோடு மாணவருக்கு ஆர்வமும் குறைய வாய்ப்பாகிவிடும். அத்துடன் உரிய பாடங்களுக்கு உரிய துணை சாதனங்களை பயன்படுத்துவதனாலேயே வினைத்திறனான கற்றலினை ஏற்படுத்த முடியும். உதாரணமாக; கணினி சார்பான பாடம் அல்லது தொழில்நுட்பத்தினை கற்பிக்கும் போது கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞானத்தினைக் கற்பிக்கும் போது உரிய சாதனங்களையும் ஏனைய துணை சாதனங்களையும் பயன்படுத்த உரிய வாண்மை விருத்தி செயல்முறைகள் உதவுகின்றன.

         அத்தோடு தனியே வகுப்பறை கற்பித்தலில் ஈடுபடாது ஏனைய இணைபாடவிதான செயல்முறைகளையும் செய்விக்கவும், மாணவர் மைய கற்பித்தலை மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி செயன்முறை அவசியமாகின்றது. வாண்மைத்துவம் இல்லையெனில் விரிவிரைமுறை கல்வியும், தனியே வகுப்பறை கற்பித்தலும் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி காலத்திற்கு காலம் மாற்றமடையும் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு   கற்றல் - கற்பித்தல் செயல்முறைகளில் ஈடுபடவும் வாண்மை விருத்தி அவசியமாகின்றது. நாட்டின் கல்வி இலக்குகள், தேவைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கலைத்திட்டம் பற்றி அறிந்து அதற்கேற்ப செயற்படவும், மாணவரில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தவும் அவசியமாகின்றது. எடுத்துக்காட்டாக; பயிற்சி பட்டறைகள் செயலமர்வுகள் போன்றவற்றின் மூலம் கலைத்திட்ட அமுலாக்கம் பற்றிய விளக்கத்தினையும் பாடத்திட்டம் சார் தெளிவினையும் வழங்கப்படுவதனை காணலாம்.

          மேலும் ஆசிரியரானவர்கள் மாறிவரும் உலகிற்கு ஏற்ப தம்மை இசைவாக்கிக் கொள்ள வாண்மை விருத்தி அவசியமாகின்றது. இன்றைய நவீன உலகில் ஆசிரியர்கள் பழமை மரபைப் பின்பற்றாமல் இசைவாக்கம் பெற வேண்டும். அவ்வாறு செய்வதால் தொழில்முறை வளர்ச்சியினை ஏற்படுத்த முடியும். குறிப்பாக தமது பதவிகளை உயர்த்துவதற்காக மேலும் கற்றுக் கொள்கின்றனர். (உதாரணமாக; பட்டப்பின் கற்கை, முதுமாணிக் கற்கை) அவ்வாறு தொடர்ந்து கற்று தமது பதவிகளை உயர்த்துவதன் ஊடாக சம்பளப் படிகளையும் உயர்வாக பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு தொழில் ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை பெறவும் ஆசிரியர் வாண்மை விருத்தி ஓர் ஆசிரியருக்கு அவசியமாகின்றது.

        மாணவர்களின் உடைய வாழ்க்கைச் முறைகளுக்கு உதவுவதாகவும் ஆசிரியரது கற்பித்தல் அமைய வேண்டும் அதாவது ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவை மட்டும் கொடுத்தால் போதாது அதனையும் தாண்டி மனப்பாங்கு அர்ப்பணிப்பு ஊக்கம் தேடல் தத்துவம் படத்தில் மாதத்தை ஏற்படுத்த வேண்டும் மாணவர்களின் உடைய மனநிலை உணவ வயது என்பவற்றினை கருத்தில் கொண்டும் செயற்பட்டு மாணவரின் முழுமையான மாற்றங்களை ஏற்படுத்தி பூரணத்துவம் கொண்ட பிறச்சையாக உருவாக்க ஒரு ஆசிரியருக்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது.

       ஆசிரியர்கள் மாணவர்களிடமும் மாணவர் சார்பாக பெற்றோர்களிடமும், சக ஆசிரியர்கள், சமூகம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமும் நல்லுறவை ஏற்படுத்த வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஏனெனில் நல்ல தொடர்பாடலானது சுமூகமான சூழலையும் கற்றலையும் பலப்படுத்தும் அவ்வாறு ஏற்றத்தாழ்வின்றி தொழில் கர்வமின்றி செய்யப்பட ஒருவருக்கு (ஆசிரியருக்கு) வாண்மை விருத்தி அவசியமாகும்.

 அத்துடன் ஆசிரியரே அதிகமான மாணவர்களுக்கு முன்மாதிரி என்ற அடிப்படையில் அவர் சிறந்த முன்மாதிரியாக திகழ வாண்மை விருத்தி அவருக்கு உதவுகின்றது. அந்த வகையில் சிறந்த மொழி நடை, பேச்சுவார்த்தை, பிறருடனான தொடர்பு நேரம் ஆக முகாமைத்துவம், நடை உடை பாவனை, ஒழுக்கம், நேர்மை, சிறந்த அறிவு, மேற்படிப்புக்கான ஆர்வம் என்பன சிறந்த முறையில் காணப்பட வேண்டும். ஏனெனில் மாணவர்கள் அவற்றை தமது வாழ்வில் பின்பற்றுபவராகக் காணப்படுவர். அதனால் அவ்வாறான பண்புகளை வாண்மை விருத்தி ஆசிரியர்களுக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக; ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் கற்கைகள் மூலம் (B.ED, P.G.D.E, M.ED) ஆசிரியர்களுக்கு (முன் சேவை, சேவைக்கால பயிற்சி) பயிற்சிகள் வழங்கப்படுவன சிறப்பான விடயமாகவும் காணப்படுகின்றன.

   மேலும் வகுப்பறை முகாமைத்துவத்தினை உரிய முறையில் பேணுவதற்கும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் வகுப்பறையில் மாணவர்களின் வகைமையை சமாளிக்கவும், மாணவர்களிடம் குழுமுறை ஒத்துணர்வைப் பேணவும், வகுப்பின் கவின்நிலையை பேணவும், நேரம் முகாமைதத்துவம் மற்றும் சுத்தம் போன்றவற்றைப் பேணவும் வாண்மை விருத்தி அவசியமாகும்.

 மாணவர் நலனில் அக்கறை பேணவும் வாண்மை விருத்தி ஆசிரியர்களுக்கு உதவுகின்றது.

 எனவே மேற்கூறப்பட்டவற்றை தொகுத்து நோக்கும் போது மாணவர் சமுதாயத்தை தட்டிக் கொடுத்து சிறந்த கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களை சிறந்த பிரஜைகளாக்கவும், ஆசிரியர்கள் தமது கற்பித்தல் சார் திறன்கள், தேர்ச்சிகள் என்பவற்றை விருத்தி செய்து கொள்ளவும், மாணவர்களினுடைய கல்வி சார்ந்த அறிவு மட்டங்களை உயர்த்தி வெற்றிகரமானதாக மாற்றி சிறந்த அடைவை நோக்கி செய்யற்படச் செய்து கொள்ளவும் ஓர் ஆசிரியருக்கு வாண்மைத்துவ விருத்தி இன்றியமையாத ஒன்றாக விளங்குவதனை காண முடியும்.


ஆசிரியர் வாண்மை விருத்தி தேவைகளை இனங்காணும் முக்கிய வழிகள்:
  • வகுப்பறை அவதானிப்பு (Classroom Observation): அதிபர், பிரதி அதிபர் அல்லது துறைசார் பொறுப்பாசிரியர்கள் வகுப்பறை கற்பித்தலை அவதானித்து, கற்பித்தல் முறைகள், வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் மாணவர் ஈடுபாடு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிதல்.
  • சுயமதிப்பீடு (Self-Assessment): ஆசிரியர்கள் தங்களின் சொந்த கற்பித்தல் திறன்கள், பாட அறிவு மற்றும் தொழில்சார் சவால்கள் குறித்து சுய பிரதிபலிப்பு (Reflection) மூலம் தேவைகளை உணர்தல்.
  • மாணவர் அடைவுப் பகுப்பாய்வு (Student Performance Analysis): தவணைப் பரீட்சைகள், வகுப்பறை மதிப்பீடுகள் மற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், எந்தப் பாடப்பரப்பில் ஆசிரியருக்கு மேலதிக பயிற்சி தேவை என்பதை இனங்காணலாம்.
  • பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி (SBPTD) குழுச் சந்திப்புகள்: பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் ஆசிரியர்களின் பொதுவான மற்றும் தனிப்பட்ட தேவைகள் கலந்துரையாடப்பட்டு இனங்காணப்படுகின்றன.
  • ஆசிரியர் தொழில் சார்ந்த பகுதிகளை இனம் காணுதல் : ஆசிரியர் தேர்ச்சிக் கட்டமைப்பின் அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மாணவர் உளவியல் சார்ந்த தேவைகளை பகுப்பாய்வு செய்தல்.
  • ஆய்வுச் செயற்பாடுகள் (Action Research): ஆசிரியர்கள் தாமாகவே தங்கள் வகுப்பறையில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணத் தேவையான அறிவை இனங்காணுதல்.
  •  ஆசிரியரது கற்பித்தல் தொடர்பான பின்னூட்டங்கள் (Feedback):               சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பயிற்சியின் தேவையை உணர்தல். 
இந்தச் செயல்முறைகள் மூலம் ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தரத்தினை மேம்படுத்தி, இன்றைய கல்வித் தேவைகளுக்கு ஏற்ப தங்களை இற்றைப்படுத்திக்கொள்ள முடியும். 


Thursday, 13 March 2025

கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள். - Social Problems Related to Education

 சமூகப் பிரச்சனை என்பது ஒரு சமுதாயத்தினுள் உருவாகும் பிரச்சனைகளாகும் இது மக்கள் தமது முழு திறனையும் அடைந்து கொள்வதை கடினமாக்குவதாக காணப்படும் வாழ்க்கையை சிதைப்பதாக அமையும் இப் பிரச்சினைகள் மாணவர்களினுடைய கல்வியையும் பாதிக்கும். அத்தோடு ஒருவரினுடைய சமூக அந்தஸ்தை விளக்கச் செய்வதோடு வாழ்க்கை பயணத்தையும் மாற்றி அமைப்பதாகவும் பிரச்சனைகள் அமையக்கூடும்.


 கல்வியுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகள்.

  • கொடுமைப்படுத்தல் (Bullying)
  • போதைப் பொருள் துஷ்பிரயோகம்            (Druk abuse)
  • பாலியல் துன்புறுத்தல்கள்                      (Sexual Harassment)
  • வகுப்புப் பாகுபாடு  (Class Discrimination)
  • வன்முறைகள்  (Violence )
  • இன ரீதியான பிரச்சினைகள்                 (Ethnic related problems)

01) கொடுமைப்படுத்தல்

  • உளம் சார் கொடுமை
  • உடல் சார் கொடுமை
  • தொல்லை கொடுத்தல்
  • கட்டாயப்படுத்துதல்
  • ஒதுக்கி வைத்தல்
  • பயத்தை ஏற்படுத்துதல்
  • வலிகளை உண்டாக்குதல்
  • அநீதி இழைத்தல்
  • குரூரம் (கொடுமை)
  • கஷ்டம் கொடுத்தல்
  • தாழ்த்திப் பேசுதல்
  • விமர்சித்தல்
  • தீமை செய்தல்

 கொடுமைப்படுத்துதலை மேற்கொள்வோர்

  • பெற்றோர்
  • சக மாணவர்கள்
  • சகோதரர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • மாணவத் தலைவர்கள்
  • ஆசிரியர்கள்
  • அதிபர்கள்
  • முதலாளிகள்

 கொடுமைப்படுத்துதல் மூலம் ஏற்படும் விளைவுகள்.


  • மன உளைச்சல்
  • உடல் ரீதியான பாதிப்பு
  • கல்வியிலிருந்து இடைவிலகுதல்
  • கொடுமைப்படுத்துவோர் மேல் வெறுப்பு
  • தவறான முடிவுகளை எடுத்தல்
  • வாழ்க்கையில் விரக்தி ஏற்படல்
  • கல்வியில் பின்னடைவு
  • முரண்பாடு ஏற்படும்

தவிர்க்கும் வழிமுறைகள்


  • இனங்கண்டு வழிகாட்டல் ஆலோசனை  வழங்கல்.
  • சட்ட விதிமுறைகளை விதித்தல்.
  • வகுப்பைறைக்கு ஆசிரியர் உரிய நேரத்திற்கு வருதல்.
  • புரிந்துணர்வை அதிகரிக்க வழிகளை ஏற்படுத்தல். (குடும்பத்தில், சக மாணவர்களுக்கு இடையில்....)
  • விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
  • விழுமியக் கல்வியை வழங்கல்.


02) போதைப் பொருள்    துஷ்பிரயோகம்


  • ஒரு நபரை போதைப் பொருள் பாவனைக்கு தூண்டுதல்.
  • போதைப் பொருளை பலவந்தமாக வழங்கல்.
  • போதைப் பொருளை பாவிக்காதோரை ஒதுக்குத்தல்.
  • போதைப் பொருளை பாவிக்காதோரை சேர்த்துக் கொள்ளாமை.                      (ஒதுக்கி வைத்தல்)
  • போதைப் பொருள் பற்றிய தவறான அறிவு வழங்கல். 
      Ex : போதைப் பொருள் உடற்சக்தியை
              வழங்கும் என கூறல்.


போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை     மேற்கொள்வோர்.

  • குடும்ப உறுப்பினர்கள்
  • சக மாணவர்கள்
  • சிரேஷ்டமானவர்கள்
  • அயலவர்கள்
  • புதிதாக அறிமுகமாகவோர்
  • விஷமிகள் 

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள்

  • நோய்கள் (புற்றுநோய், அங்க இழப்பு)
  • கல்வி பாதிப்பு
  • ஒதுக்கி வைக்கப்படல் (சமூகம், குடும்பம், நண்பர்களால் ஒதுக்கப்படுவார்கள்)
  • தவறான செயல்களில் ஈடுபடல். (குற்றச் செயல்கள் : களவு, கொலை)
  •  மனநிலை பாதிக்கப்படல்
  •  உடல் வலிமை இழத்தல்
  •  மூளையின் செயற்பாடு பாதிக்கப்படல்
  •  நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்
  •  குற்றச் செயல்களில் ஈடுபடல்
  •  உணர்வுகளை இழத்தல்
  •  இலகுவாக நோய் தொற்றுக்கு உள்ளாதல்

தவிர்க்கும் வழிமுறைகள்
  •  சட்டரீதியாக தடுத்தல்
  • விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (மாணவர், பெற்றோர்)
  •  மருத்துவ உதவியை பெற்றுக் கொடுத்தல்
  •  சிறுவர் புனருத்தாரண நிலையங்களின் உதவியை பெற்றுக் கொடுத்தல்
  •  விழுமிய பண்புகளை புகட்டுதல்


03) பாலியல் துன்புறுத்தல்

  • பாலியல் ரீதியில் நோக்குதல்
  • தவறான முறையில் ஸ்பரிசம் செய்தல்
  • பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுதல்.
  • பாலியல் உணர்வை தூண்டும் வகையிலான படங்களை காண்பித்தல்.

பாலியல் துன்புறுத்தல் ஏற்படக் கூடிய இடங்கள்

  • குடும்பம்
  • பாடசாலை
  • பயணங்களின் போது
  • வணக்கஸ்தலங்களில்

ஏற்படுத்தக் கூடிய நபர்கள்

  • குடும்ப உறுப்பினர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • சக பயணிகள்
  • சக நண்பர்கள்
  • ஆசிரியர்கள்

விளைவுகள்
  • தற்கொலை
  • உயிரிழப்பு
  • அடுத்தவர் மீதும் தங்கள் மீதும் நம்பிக்கை குறைவு.
  • மன உளைச்சல்
  • சுற்றத்தாரிடம் விலகி இருத்தல்.
  • சக்தி இல்லாமல் இருத்தல்.
  • மனச்சோர்வு
  • அதிகம் கோவப்படுதல்.
  • உண்பதில் ஒழுங்கீனம்.
  • போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாதல்.
  • கல்வியில் நாட்டமின்மை
  • பதட்டம்
  • பயம் காணப்படும்.
  • வழமையான செயற்பாடுகளில் மாற்றம்.
  • திடீர் பயம்
  • வயதுக்கு பொருத்தமற்ற பாலியல் பற்றிய அறிவு.

தவிர்க்கும் வழிமுறைகள்

  • பிள்ளைகளுடன் பழகுபவர்கள் உரிய தகுதி பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தல். (ஆசிரியர், சமூக உறுப்பினர்கள் )
  • பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த உரிமை வழங்கல். (பிள்ளைகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் தன்மையாக, அன்பாக நடந்து கொள்ளல்)
  • பிள்ளைகளின் கருத்துக்கு மதிப்பளித்தல்.
  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உளவள ஆலோசகரிடமும் முறையிடல்.
  • விழிப்புணர்வு வழங்கல்.
  • கைகொடுத்தல்.
  • சுய காப்பு பற்றி கற்றுக்கொடுத்தல்.

04) வகுப்பு பாகுபாடு


  • ஏற்றத்தாழ்வுகள்.
  • சமூக, சமயக் குழுக்களிடையே பகமையை தூண்டும் விதத்தில் அமைதல்.
  •  சமுதாயத்தை பிளவுபடுத்தும் காரணிகளை ஏற்படுத்துதல்.
  • வன்முறையை உண்டு பண்ணுதல்.
  • கலவரத்தை ஏற்படுத்தல்.
  • வகுப்பறையில் மாணவர்களிடையே இடைவெளி பேணப்படுதல்.

 வகுப்பு பாகுபாடு ஏற்படுவதற்கான அடிப்படைகள் 

  •  மதம் சார்ந்த பிளவுகள்
  •  பொருளாதார காரணிகள்
  • அரசியல் காரணிகள்
  •  ஜாதி
  •  இனம்
  •  தொழில் பாகுபாடு
  •  பண்பாடுகள்
  •  பழக்கவழக்கங்கள்
  •  வேறுபட்ட கொள்கைகள்

 பாதிப்புக்கள்

  •  மன உளைச்சல்
  • ஏற்றத் தாழ்வுகள்
  • கல்வி இடைவிலகல் 
  • விரக்திக்கு உட்படல்.
  • தனிமை முரண்பாடுகள்.
  • வன்முறைகள்
  • தற்கொலைகள்.
  •  குற்றச் செயல்களில் ஈடுபடல்.

 தவிர்க்கும் முறைகள்

  • குழு வேலைகளில் ஈடுபடுத்தல் 
  •  சமமாக உட்கார வைத்தல்.
  • பொதுவான வழிகாட்டல்
  • தலைமத்துவப் பயிற்சி வழங்கல்.
  •  ஆலோசனைகளை வழங்கல்.
  •  சட்ட விதிமுறைகளை விதித்தல்.
  • விழுமிய கல்வியை போதித்தல்.


05) வன்முறைகள்

ஒருவர் வேண்டுமென்றே சக்தியைப் பயன்படுத்தி தனக்கு அல்லது மற்றொரு நபருக்கு / ஒரு சமூகத்திற்கு உடல் ரீதியான அச்சுறுத்தல், அதிர்ச்சி, உளவியல் ரீதியிலான பாதிப்பு உருவாக்குவதுடன் மரணத்துக்கும் வழிவகுக்கும் செயற்பாடு.
       -  WHO -           

ஏற்படுத்தக் கூடிய நபர்கள்

  • குடும்ப உறுப்பினர்கள்
  • உறவினர்கள்
  • அயலவர்கள்
  • சக பயணிகள்
  • சக நண்பர்கள்
  • ஆசிரியர்கள்
  • அதிபர்கள்

விளைவுகள்

  • பயம்
  • கல்வியில் நாட்டமின்மை
  • பதட்டம்
  • சோர்வு
  • பழி தீர்க்கும் எண்ணம்
  • தனிமையை விரும்பல்
  • மதிப்பீடுகளில் குறைவான புள்ளி பெறல்.
  • பாடசாலை நிகழ்வுகளிலிருந்து ஒதுங்குதல்.
  • பாடசாலையிலிருந்து இடைவிலகல்.
  • சுற்றத்தார் மீது வெறுப்பு.
  • பகை உணர்வு.

வன்முறையிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் முறைகள்.

  • விழிப்புணர்வு.
  • வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்.
  • கருத்து தெரிவிக்க உரிமை வழங்கல்.
  • தலைமைத்துவ பயிற்சி வழங்கல்.
  • பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு அரவணைத்தல்.
  • நம்பிக்கையை வழங்கல்.


06) இன ரீதியான பிரச்சினைகள்


  • பல்லின மாணவர்கள் ஒரே வகுப்பில் கற்பதால் ஏற்படும் முரண்பாடு.
  • பெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் இனத்துவத்தை ஏற்படுத்தல்.
  • ஆசிரியர்கள் இனத்துவம் பேணல்.

இன பிரச்சினைகள் யாருக்கு இடையில் ஏற்படலாம்.

  • மாணவ - மாணவருக்கு இடையில்.
  • ஒரு வகுப்பு மாணவர்களுக்கும் இன்னொரு வகுப்பு மாணவர்களுக்கும் இடையில்.
  • மாணவ - ஆசிரியருக்கு இடையில்.
  • ஆசிரியர் - ஆசிரியருக்கு இடையில்.
  • மாணவ - கல்வி சாரா ஊழியருக்கு இடையில்.

விளைவுகள்

  • மாணவர் மனநிலை பாதிக்கும்
  • ஒருவருக்கொருவர் குரோதம் ஏற்படும்.
  • கற்றலில் வீழ்ச்சி.
  • மாணவர் - மாணவர் உறவு பாதிக்கும்.
  • பெற்றோருக்கு இடையில் முருகல் ஏற்படும்.
  • வகுப்பறை குழுச்செயற்பாடுகள் பாதிக்கும்

தவிர்க்கும் வழிமுறைகள்

  • விழிப்புணர்வு வழங்கல்.
  • சமத்துவ உணர்வை ஏற்படுத்தல்.
  • குழுச்செயற்பாடுகளை செய்வித்தல்.
  • ஜனநாயக உணர்வை வலுப்படுத்தல்.


Tuesday, 21 January 2025

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மற்றும் அறிவுரை (வேறுபாடு) - Guidense, counseling and Advoice (Difference)

 வழிகாட்டல் 


 "வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள உதவி தேவைப்படும் ஒருவருக்கு அதற்கான தகமை உள்ள ஒருவரால் வழங்கப்படும் உதவி."

- குரோ And குரோ-


" எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவெடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் எனப்படும்."

எஸ். மொறிசன்


"அபிவிருத்தி சார்ந்த ஒரு செயன்முறையாகும். அது தனியாளின் தொழில் சார் கல்வி, தனிப்பட்ட சமூக அனுபவங்கள் தொடர்பாக வழங்கப்படுதலாகும்."

ரொபட் மதிவ்சன்


"தீர்மானம் எடுப்பதற்கும் இசைவடைவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணரும் சுய விருத்தி செயன்முறை ஆகும். "

ஆதர் ஜோன்ஸ், ஜோர்ச், மயர்ஸ்


"மாணவருக்கு பாடசாலையுடன் இசைவடைவதற்கும் கற்கைப் பரப்பை தெரிவு செய்து கொள்வதற்கும் வழங்கப்படும் உதவி. "

டருமன் கெலி


"மாணவன் பாடசாலையையும், வாழ்க்கையின் தாக்கங்களையும் வெற்றி கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் ஒரு தலையீட்டுச் செயன்முறையாகும்."

விவிலியம் பெரொக்டர்


"தான் எதிர்கொள்ளும் பிரச்சனை நிலைமைகளை இனங்கண்டு இவை தொடர்பாக வெற்றிகரமாகத் துலங்குவதற்காகத் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணர்ந்து, உறுதியான சுய எண்ணக்கருவின் முதிர்ச்சியை நோக்கிச் செல்வதற்காக வழங்கப்படும் ஓர் உந்துகையாகும்."

கார்ல் ரொஜர்ஸ்


"தெரிவு செய்தல் பொருத்தப்பாடு கானல் பிரச்சனை தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உதவி வழிகாட்டல் ஆகும்."

ஆ. ஜே. ஜேம்ஸ்



 ஆலோசனை



"ஒருவருக்கு அவர் பற்றிய சுய விளக்கத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படும் உதவி ஆலோசனை ஆகும்."

கார்ல் ரொஜர்ஸ்



"ஆலோசகருடன் ஒரு தனியாள் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் ஆலோசனை ஆகும்."

போடின் 




வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு இடையிலான வேறுபாடுகள்


வழிகாட்டல்

  • இலகுவானது.
  • பரந்துபட்டது.
  • விஞ்ஞான செயன்முறை இருக்காது.
  • தீர்வுக்கு வழிகாட்டப்படும்.
  • விசேட பயிற்சி தேவையில்லை.
  • நூல் அறிவு மட்டும் போதுமானது.
  • கூட்டான செயன்முறை.


 ஆலோசனை

  • சிக்கலானது.
  • ஆழமானது.
  • விஞ்ஞானம் சார் செயன்முறை.
  • தனியாள் தானே தீர்வை தேட வழிகாட்டப்படும்.
  • விசேட பயிற்சி தேவை.
  • உளவியல், ஆள்மன, புள்ளியியல் அறிவு தேவை.
  • நூல் அறிவுடன் செயன்முறை பயிற்சியும் தேவை.
  • தனியாளின் உள்ளார்ந்த செயன்முறை.



வழிகாட்டல் மற்றும் அறிவுரைப்புக்கு இடையிலான வேறுபாடுகள்


ஆலோசனை

  •  பொருத்தமான சூழல் முக்கியம்.
  • ஒழுக்க கோவை அவசியம்.
  • பிரயோக பயிற்சி அவசியம்.
  • ஆலோசகரின் ஆதிக்கம் இருக்காது.
  • புத்திமதி கூறக்கூடாது.
  • தீர்வு சொல்ல முடியாது.
  • ஆலோசனையை ஏற்க்கலாம் ஏற்காமலும் விடலாம்.
  • ஆலோசனையை மையமாகக் கொண்டது.
  • பொறுப்பு, சேவைப்பொறுப்பாளரைச் சாரும்.
  • ஆலோசனை நாடியை மையமாகக் கொண்டது.

அறிவுரை


  • பொருத்தமான சூழல் அவசியமன்று.
  • ஒழுக்க கோவை அவசியமன்று.
  • பிரயோக பயிற்சி தேவை இல்லை.
  • ஆலோசகரின் ஆதிக்கம் இருக்கும்.
  • புத்திமதி கூறப்படும்.
  • தீர்வு காண முடியாது.
  • அறிவுரையை கட்டாயம் ஏற்க வேண்டும்.
  • பொறுப்பு அறிவுரை வழங்குபவரைச் சாரும்.
  • அறிவுரை கூறுபவரை மையமாகக் கொண்டது.

Thursday, 2 January 2025

இலங்கையில் ஏற்பட்ட பௌத்த பரம்பல் - The Buddhist tradition in Sri Lanka -

இலங்கையில் இடம் பெற்ற பௌத்த பரம்பல்

 இலங்கை வரலாற்றிலே கி.மு 3ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பரவலடைந்த சமயம் பௌத்த சமயமாகும். இந்தியாவில் கபிலபஸ்து என்ற இடத்தில் அவதரித்த சித்தார்த்தர் என்ற இயற்பெயர் கொண்ட கௌதம புத்தரினால் மூப்பு, பிணி, சாக்காடு என்னும் மூன்று நிலையாமைக் கருத்துக்களின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது பௌத்த சமயமாகும். அந்த வகையில் இந்தியாவில் தோன்றி வளர்ந்த இச்சமயம் அசோகச் சக்கரவர்த்தி என்ற மௌரிய வம்ச மன்னன் ஆட்சிக்காலத்தில் இலங்கையிலே ஆட்சி புரிந்த தீஸனுடன் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக பரப்பப்பட்டது என தெரிய வருகிறது.


 அசோக சக்கரவர்த்தி கி.மு 261 ஆம் ஆண்டு கலிங்க யுத்தத்தின் பின்னர் பௌத்த சமயத்திக்கு மதம் மாறினார். இவ்வாறு மதம் மாறிய அவர் கி.மு 246 ஆம் ஆண்டளவிலே மூன்றாவது பௌத்த மகாநாட்டை "பாடலிபுரம்" என்ற இடத்திலே கூட்டினார் . இந்த மகாநாட்டிற்கு "மகாலிங்க புத்த தேரர்" என்பவர் தலைமை தாங்கினார். இவர் மகாநாட்டின் முடிவிலே பௌத்த சமயத்தை பரப்ப வேண்டுமாக இருந்தால் தர்ம விஜய குழுக்களை நிறுவி (மகாமந்திரர் குழு) அவர்கள் மூலம் பௌத்தத்தை உலக நாடுகளுக்கு பரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


 இதன் பிரகாரம் மகிந்த தேரர் என்பவர் தலைமையில் இத்திய, உத்திய, சமபல, பத்தசால, பண்டுக, உபாசக சுமனசாமனேய ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்று இலங்கை வந்தது. அவ்வாறு இலங்கை வந்த குழுவினர் மிகிந்தலை குன்றிலே தங்கி இருந்தனர். அவ்வேளையில் மூத்த சிவனின் மகனான தீஸன் தனது நண்பர்களோடு மிகிந்தலை பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அவ்வேளையில் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தீஸன் தனது நண்பர்களை பிரிந்து தனியே நின்ற போது "ஏய் தீஸா இங்கே வா" என ஒரு குரல் கேட்டது. அவ்வேளையில் குரல் வந்த திசையை நோக்கி தீஸன் திரும்பிய போது அங்கே மகிந்த தேரர் நிற்பதை கண்டார். மஹிந்த தேரரை பார்த்து தீஸன் நீங்கள் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்? எனக் கேட்டான். அதற்கு மகிந்த தேரர் தான் அசோகனது விருப்பின் பெயரில் இலங்கைக்கு பௌத்த சமயத்தை பரப்புவதற்காக வந்ததாக தெரிவித்தார். பௌத்தம் பற்றி கேட்டு அறிந்து கொண்ட தீஸன் தானும் அந்த மதத்தை பின்பற்ற விரும்புவதாகவும் சிறிது நாட்களின் பின் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக கூறி அரண்மனைக்கு திரும்பினார்.


  சிறிது நாட்களின் பின் தீஸன் தனது முடி சூட்டு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டான். அசோகனிடம் அரிட்ட குமார என்ற இளவரசன் தலைமையிலான குழு ஒன்றினை அனுப்பி வைத்தான். அவ்வாறு சென்ற குழுவினர் அசோகனிடம் சென்று தீஸன் ஒரு முடிசூட்டு விழாவை நடத்த ஆசைப்படுவதாக தெரிவிக்கவே உடனே அசோகன் முடி சூட்டு விழாவிற்கு தேவையான பொருட்களையும் சில புரோகிதர்களையும் அனுப்பி வைத்தான். "நீண்டவாள், கிரீடம், பட்டாடைகள், முத்துமாலைகள், அரச ஆபரணங்கள்" உள்ளிட்ட பொருட்களையும் அத்தோடு "கல்ல பத்த       பதோபம்"                                (மும்மணிகளிடத்தே நீயும்                  சரணடைவாய் என எழுதப்பட்ட ஒரு ஓலையையும் அரிட்ட குமாரனிடம் கொடுத்து அனுப்பினான். அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு தீஸன் மிக பிரமாண்டமான முடிசூட்டு விழா ஒன்றை நடத்தினார். இது தீஸனது இரண்டாவது முடி சூட்டு விழா ஆகும்.


 தீஸன் மிகிந்தலையிலே தங்கி இருந்த மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அரண்மனைக்கு வரவழைத்து பௌத்தம் பற்றி உரையாற்ற வாய்ப்பளித்த வேளையில் அங்கே மகிந்த தேரர் உரையாற்றினார். இதனால் பலர் பௌத்த சமயத்தை பின்பற்ற விருப்பம் தெரிவித்தனர்.  தீஸன் அசோகனது பட்டப் பெயரான "தேவானாம் பிரிய" என்பதை தன் பெயருடன் இணைத்து "தேவ நம்பிய திஸ்ஸ" என மாற்றிக் கொண்டான். அத்துடன் தன்னை பௌத்தனாகவும் மாற்றிக் கொண்டான். சிறிது நாட்களின் பின்னர் மகிந்த தேரரையும் அவரது குழுவினரையும் அனுராதபுரத்திற்கு வரச் செய்து அரண்மனையிலே உரையாற்ற செய்தான். அவ்வுரையை கேட்ட பலரும் பௌத்தத்துக்கு மாறினார்கள். குறிப்பாக தீஸன் பௌத்தனாகவும் அரிட்டன் பௌத்த துறவியாகவும் மாறிக்கொண்டனர். பௌத்த மதம் பரவல்  அடைவதைக் கண்ட தீசன் தனது தந்தையாரால் அமைக்கப்பட்டிருந்த மகாமேகவன பூங்காவை பௌத்த சங்கத்திற்கு தானமாக வழங்கினான். மகாமேகவன பூங்காவை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பௌத்த சமயம் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு பௌத்த சமயம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையில் இலங்கையில் தூபிகள், விகாரைகள் அமைப்பதற்கு மகிந்ததேரர் விரும்பினார். தனது விருப்பத்தை திஸனிடம் தெரிவிக்கவே தீசன் சுமணதேரர் தலைமையில் ஒரு குழு ஒன்றை வட இந்தியாவுக்கு அனுப்பி அசோகனிடம் நிலைமையை தெரிவிக்கவே அசோகன் பௌத்த கட்டிடங்களை நிர்மாணிக்க கூடிய குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். குழுவினரிடம் புத்தரது வலது பக்க விலா எலும்பு உட்பட பல பௌத்த புனித பொருட்களைக் கொடுத்து அனுப்பினார். அப்பொருட்களை முதன்முதலில் மிகிந்தலை குன்றிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. குன்று புனித பொருட்களால் புனிதமடைந்தது என கூறப்படுகின்றது. இப்புனித பொருட்கள் அங்கு வைக்கப்பட்டதால் மிகுந்தலையானது "சேத்தியகிரி" என்றும் "நிசாகபர்வதம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர் பல்வேறு விகாரைகள், தூபிகள் மற்றும் கட்டிடங்களை நிறுவினார்கள் என தெரிய வருகிறது. மகாவிகாரை பகுதியிலே தூபராமதாது கோபம் என்ற தூபி ஒன்றை நிறுவினான். அதனுள் புத்தபிரானது எலும்பு எச்சம் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டது. பிக்குகளுக்காக பிக்கு சாசனம் என்ற கட்டிடமும், பெண் பிக்குகளுக்காக பிக்குணி சாசனம் (மகாபாலி) நிறுவப்பட்டது. இது மகாவிகாரை என அழைக்கப்பட்டது. இசுருமுனிய விகாரை, படன விகாரை, ஜம்புகோள விகாரை, திசமகாராம விகாரை, ஹத்தாஸ்கஹ விகாரை உள்ளிட்ட பல்வேறு விகாரைகள் நிறுவப்பட்டன. பௌத்த கட்டிடங்கள் நிறுவப்பட்டதை தொடர்ந்து இலங்கையிலே கட்டடக்கலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. தீஸன் கட்டடக்கலை, சிற்பக்கலை வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் செலுத்தினான்.


 பௌத்த சமயம் பரவல் அடைந்தபோது அனுலா தலைமையிலான சில பெண்கள் துறவறம் போல விரும்பினர். இதற்காக பெண் பிக்குகள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இதற்காக அரிட்டதேரர் தலைமையில் ஒரு தூதுக்குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சங்கமித்தை என்ற பெண் துறவியுடன் ஒரு குழு ஒன்று இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது. இந்தியாவின் தாமிரலிப்தி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கை ஜம்புகோளத் துறைமுகத்தை வந்தடைந்தனர். இவர்கள் பாதஜாத்திரியாக அனுராதபுரத்தை அடைந்து மகாமேகவன பூங்கா பகுதியில் சங்கமித்தை இலங்கை வருகின்ற போது அங்கிருந்து கொண்டு வந்த வெள்ளரசு கிளையையும் மகாமேகவன பூங்கா பகுதியில் நட்டு இலங்கையை "ஒரு பௌத்த பூமி" என அழைத்தார். சங்கமித்தாவுடன் இலங்கை வந்த சில மௌரிய குடும்பங்கள் அனுராதபுரத்தில் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். சங்கமித்தையிடம் கல்விகற்று அனுலா மற்றும் அவளது குழுவினர் துறவறத்தை பின்பற்றினர்.


 இவ்வாறாக தீஸன் காலத்திலே இலங்கையில் பௌத்த சமயமானது நிலைபெற்று பரவி இருந்தமையை காண முடிகிறது.


M. பத்மன் 

ஆசிரியர் வாண்மை விருத்தி

ஆசிரியர் வாண்மை விருத்தி "ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை / பெறுபேறுகளை வெற்றிகாரமான வகையில் உ...