வழிகாட்டல்
"வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள உதவி தேவைப்படும் ஒருவருக்கு அதற்கான தகமை உள்ள ஒருவரால் வழங்கப்படும் உதவி."
- குரோ And குரோ-
" எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவெடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் எனப்படும்."
எஸ். மொறிசன்
"அபிவிருத்தி சார்ந்த ஒரு செயன்முறையாகும். அது தனியாளின் தொழில் சார் கல்வி, தனிப்பட்ட சமூக அனுபவங்கள் தொடர்பாக வழங்கப்படுதலாகும்."
ரொபட் மதிவ்சன்
"தீர்மானம் எடுப்பதற்கும் இசைவடைவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணரும் சுய விருத்தி செயன்முறை ஆகும். "
ஆதர் ஜோன்ஸ், ஜோர்ச், மயர்ஸ்
"மாணவருக்கு பாடசாலையுடன் இசைவடைவதற்கும் கற்கைப் பரப்பை தெரிவு செய்து கொள்வதற்கும் வழங்கப்படும் உதவி. "
டருமன் கெலி
"மாணவன் பாடசாலையையும், வாழ்க்கையின் தாக்கங்களையும் வெற்றி கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் ஒரு தலையீட்டுச் செயன்முறையாகும்."
விவிலியம் பெரொக்டர்
"தான் எதிர்கொள்ளும் பிரச்சனை நிலைமைகளை இனங்கண்டு இவை தொடர்பாக வெற்றிகரமாகத் துலங்குவதற்காகத் தம்மிடத்தே உள்ள சக்தியை வெளிக்கொணர்ந்து, உறுதியான சுய எண்ணக்கருவின் முதிர்ச்சியை நோக்கிச் செல்வதற்காக வழங்கப்படும் ஓர் உந்துகையாகும்."
கார்ல் ரொஜர்ஸ்
"தெரிவு செய்தல் பொருத்தப்பாடு கானல் பிரச்சனை தீர்த்தல் ஆகியவற்றில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் உதவி வழிகாட்டல் ஆகும்."
ஆ. ஜே. ஜேம்ஸ்
ஆலோசனை
"ஒருவருக்கு அவர் பற்றிய சுய விளக்கத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படும் உதவி ஆலோசனை ஆகும்."
கார்ல் ரொஜர்ஸ்
"ஆலோசகருடன் ஒரு தனியாள் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காண பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம் ஆலோசனை ஆகும்."
போடின்
வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு இடையிலான வேறுபாடுகள்
வழிகாட்டல்
- இலகுவானது.
- பரந்துபட்டது.
- விஞ்ஞான செயன்முறை இருக்காது.
- தீர்வுக்கு வழிகாட்டப்படும்.
- விசேட பயிற்சி தேவையில்லை.
- நூல் அறிவு மட்டும் போதுமானது.
- கூட்டான செயன்முறை.
ஆலோசனை
- சிக்கலானது.
- ஆழமானது.
- விஞ்ஞானம் சார் செயன்முறை.
- தனியாள் தானே தீர்வை தேட வழிகாட்டப்படும்.
- விசேட பயிற்சி தேவை.
- உளவியல், ஆள்மன, புள்ளியியல் அறிவு தேவை.
- நூல் அறிவுடன் செயன்முறை பயிற்சியும் தேவை.
- தனியாளின் உள்ளார்ந்த செயன்முறை.
வழிகாட்டல் மற்றும் அறிவுரைப்புக்கு இடையிலான வேறுபாடுகள்
ஆலோசனை
- பொருத்தமான சூழல் முக்கியம்.
- ஒழுக்க கோவை அவசியம்.
- பிரயோக பயிற்சி அவசியம்.
- ஆலோசகரின் ஆதிக்கம் இருக்காது.
- புத்திமதி கூறக்கூடாது.
- தீர்வு சொல்ல முடியாது.
- ஆலோசனையை ஏற்க்கலாம் ஏற்காமலும் விடலாம்.
- ஆலோசனையை மையமாகக் கொண்டது.
- பொறுப்பு, சேவைப்பொறுப்பாளரைச் சாரும்.
- ஆலோசனை நாடியை மையமாகக் கொண்டது.
அறிவுரை
- பொருத்தமான சூழல் அவசியமன்று.
- ஒழுக்க கோவை அவசியமன்று.
- பிரயோக பயிற்சி தேவை இல்லை.
- ஆலோசகரின் ஆதிக்கம் இருக்கும்.
- புத்திமதி கூறப்படும்.
- தீர்வு காண முடியாது.
- அறிவுரையை கட்டாயம் ஏற்க வேண்டும்.
- பொறுப்பு அறிவுரை வழங்குபவரைச் சாரும்.
- அறிவுரை கூறுபவரை மையமாகக் கொண்டது.
இப் பதிவு பெரிதும் உதவியாக இருந்தது Sir. Thank you and தொடர்ந்தும் இதுபோல பயன்னுள்ள தகவல்களை பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள் Sir. 🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteVery Uueful Thank you Sir 👍🏻
ReplyDelete